விஜய் சந்திப்பில் நடந்தது என்ன… முதல்வர் பரபரப்பு பேட்டி

 

விஜய் சந்திப்பில் நடந்தது என்ன… முதல்வர் பரபரப்பு பேட்டி

திமுக தலைவர் பேசம்போது, குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறோம் என்று பேசியுள்ளாரே? என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோவை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’அவரே ஒத்து கொண்டாரல்லவா? கார்பரேட் கம்பெனி என்று ஒத்துக் கொண்டாரல்லவா? ஏனென்றால், நன்றாக சிந்தித்துப் பாருங்கள். முதலில் கலைஞர் வந்தார். அவருக்குப் பிறகு எவ்வளவு தலைவர்கள் வந்தார்கள்? அவர்களை விட்டு, விட்டு, ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினார்கள். அவரும் ஓரளவு போராட்டங்களில் கலந்து கொண்டார்.

விஜய் சந்திப்பில் நடந்தது என்ன… முதல்வர் பரபரப்பு பேட்டி

ஆனால் ஸ்டாலின் மகன் உதயநிதி எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்? அவரின் வயது என்ன? இவருக்கு முன்பு துரை முருகன், நேரு, பெரியசாமி இருக்கிறார்கள். இப்படி பல தலைவர்கள், அந்த கட்சிக்காக உழைத்தவர்கள் திமுகவில் இருக்கிறார்கள். அவர்களை முன்னிறுத்தலாமே? நிறுத்த வில்லையே? அதனால்தான் வாரிசு அரசியல் என்று நான் சொல்கிறேன்’’என்றவர், ’’உதயநிதிக்கு பின்னால் உதயநிதி மகன் வருவார். அது கட்சியல்ல, கார்பரேட் கம்பெனி, அதனால் படிப்படியாக அவர்கள் வாரிசுதான் வரும். கழகத்தில்தான் தலைமைக்கும், மக்களுக்கும் உழைக்கின்றவர்கள் நிச்சயமாக உயர்ந்த பதவிக்கு வர முடியும். என்மாதிரி’’என்றார்.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு, ’’விரைவில் வாக்குறுதிகள் வரும். தேர்தல் அறிக்கையில்தான் அவை வெளியிடப்படும்’’ என்றார்.

விஜய் சந்திப்பில் நடந்தது என்ன… முதல்வர் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை குறித்த பேச்சு பற்றிய கேள்விக்கு, ‘’தமிழகத்தை பொறுத்த வரை கூட்டணி மந்திரி சபையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுதான் கழகத்தின் நிலைப்பாடு’’ என்றார்.

நடிகர் விஜய் இரவில் தங்களை சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு, ‘’திரையரங்குகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. திரையரங்கங்கள் முழுமையாக திறப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்’’என தெரிவித்தார்.