உங்களின் முடிவு ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் உடைத்துவிட்டது.. குஷ்பு

 

உங்களின் முடிவு ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் உடைத்துவிட்டது.. குஷ்பு

தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன் ஆகிய ரஜினி நடித்த படங்களில் நடித்த குஷ்பு, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ரஜினி எனக்கு நல்ல நண்பர் என்று சொல்லி வரும் குஷ்பு, ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்ததும், சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் தொடர்கிறது நட்பு என்று சொல்லி இருந்தார் குஷ்பு.

உங்களின் முடிவு ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் உடைத்துவிட்டது.. குஷ்பு

இந்நிலையில் ரஜினிகாந்த் தான் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதை இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், ’’அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களின் முடிவு ஒவ்வொரு தமிழனின் இதயத்தையும் உடைத்துவிட்டது. ஆனால், உடல்நிலையும், நல்வாழ்வையும் தவிர வேறு என்ன முக்கிய இருக்கிறது என்பது புரிகிறது.

ஒரு நண்பராக உங்களின் முடிவுக்கு வாழ்த்துகிறேன். உங்கள் முடிவுக்கு ஆதரவாக இருப்பேன். நீங்கள் விலைமதிப்பற்றவர்; எனக்கு மிகவும் முக்கியமான நபர். மகிழ்ச்சியாக இருங்கள் அதே நேரம் மிகவும் கவனமாக இருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.