ரஜினி அறிக்கையின் கடைசி பாராவில் உள்ள வரிகள்…சுட்டிக்காட்டும் குருமூர்த்தி

 

ரஜினி அறிக்கையின் கடைசி பாராவில் உள்ள வரிகள்…சுட்டிக்காட்டும் குருமூர்த்தி

அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள் என்று தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதை அறிக்கை மூலமாக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினி அறிக்கையின் கடைசி பாராவில் உள்ள வரிகள்…சுட்டிக்காட்டும் குருமூர்த்தி

மூன்று பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் மூன்றாவது பக்கத்தில், தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து குருமூர்த்தி, ‘’உடல் நலம் காரணமாக ரஜினிகாந்த் தனது முடிவினை என்னிடம் கூறினார். அது தவிர்க்க முடியாதது. அதனால் அவர் அந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால், ரஜினிகாந்த் நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும், அவர் தமிழக மக்களுக்கு சேவை செய்வார் என்று கூறி இருக்கிறார். அவர் எழுதியுள்ள கடிதத்தின் இறுதி பாராவில் அதை குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி பார்த்தால், என்னுடைய அனுமானத்தில் சொல்கிறேன்…தமிழ்நாட்டு அரசியலில் 1996ல் தாக்கத்தினை ஏற்படுத்தியது போல, 2021 தேர்தலிலும் ஏற்படுத்துவார் என்று தெரிகிறது’’ என்ற குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி அறிக்கையின் கடைசி பாராவில் உள்ள வரிகள்…சுட்டிக்காட்டும் குருமூர்த்தி

அமித்ஷாவின் நண்பரான குருமூர்த்தி, ரஜினியை நேரில் சந்தித்து பேசியிருந்தார். அதன்பின்னர்தான் அமித்ஷா சென்னை வந்து சென்றார். இந்நிலையில், 1996 போல் என்று சொல்லி இருப்பதால், ரஜின் வாய்ஸ் கொடுப்பார் என்று சொல்லி இருக்கிறார் குருமூர்த்தி. அதாவது, பாஜகவுக்கு வாய்ஸ் கொடுப்பார் என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார்.