அரசு கட்டிடத்தை இடித்து மாட்டுக்கொட்டைகையாக மாற்றிய அமைச்சர்!

 

அரசு கட்டிடத்தை இடித்து மாட்டுக்கொட்டைகையாக மாற்றிய அமைச்சர்!

ஆக்கிரமைப்பு அமைச்சர் என்றுதான் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அழைக்கிறார்கள் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்து மக்கள் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பணத்தை காட்டினால் ‘ஓ! யெஸ்’என்பார்; மற்றபடி‘நோ’மணியன்தான்.. என்றும் .ஸ்டாலின் கமெண்ட் அடித்தார்.

அரசு கட்டிடத்தை இடித்து மாட்டுக்கொட்டைகையாக மாற்றிய அமைச்சர்!

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சார்பில் நடைபெற்ற ’தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனக்கு சொந்தமான இறால் பண்ணை அமைக்க அடப்பாறு முகத்துவாரத்தை அடைத்துவிட்டார் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுவது அவருக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பினால் மற்றவர் விளைநிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது என்பதும் அவருக்கு தெரியாதா? மழைக்காலங்களில் மழை நீர் வடிய வழியில்லாமல் அவ்வப்போது ஏரி போல காட்சி அளிப்பதாவது அவருக்கு தெரியதா என்ன? என்று கேட்டார்.

அரசு கட்டிடத்தை இடித்து மாட்டுக்கொட்டைகையாக மாற்றிய அமைச்சர்!

மேலும், ’’தலைஞாயிறு பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தினை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் சொல்கிறார்கள். அவதற்கு அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்? தலைஞாயிறு பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஏழை மக்கள் பயன்படுத்திவந்த சமுதாய நலக்கூடத்தினை இடித்து மாட்டுக்கொட்டைகையாக மாற்றிவிட்டார் என்று மக்கள் சொல்லும் புகாருக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? மருமகன் பெயரில் அமைச்சர் ஓ.எஸ்.,மணியன் டெண்டர்கள் எடுத்து வருகிறார் என்று சொல்கிறார்களே.. அது உண்மையா?’’ என்றார்.

அரசு கட்டிடத்தை இடித்து மாட்டுக்கொட்டைகையாக மாற்றிய அமைச்சர்!

’’நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதிலும் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? அமைச்சரின் பினாமிகளா? கொலை வரைக்கும் போனதே? இந்த விவகாரம் குறித்து என்ன பதில் சொல்லப்போகிறார்?’’என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பொதுவாக பணத்தை காட்டினால் மட்டும்தான் ‘ஓ! யெஸ்’ என்பார். மற்றபடி ‘நோ’மணியன்தான். இதை இந்த மாவட்டத்துக்காரர்களே சொல்கிறார்கள் என்றார்.