ஈபிஎஸ் – எஸ்.பி.வி. மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்

ஈபிஎஸ் – எஸ்.பி.வி. மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்

அவசர அவசரமாக நேற்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த புகார் மனுவில், குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசை அறிவித்துள்ளார் முதல்வர். ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை உள்பட ரூபாய் 2500ம் அடங்கும். தமிழகத்தில் மொத்தம் 2.6 கோடி குடும்ப அட்டைதார்கள் இந்த பயனை பெற இருக்கிறார்கள்.

ஈபிஎஸ் – எஸ்.பி.வி. மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்

முதலமைச்சர்கள் பணத்தில் இருந்தோ அமைச்சர்கள் பணத்தில் இருந்தோ ஆளுங்கட்சியின் பணத்தில் இருந்தோ இது வழங்கவில்லை. அரசு நிதியில் இருந்தே வழங்கப்படுகிறது. ஆனால் கட்சி நிதியில் இருந்து வழங்கப்படுவதை போல மூவர்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் படமும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் படமும் பெயரும் அச்சிடப்பட்ட டோக்கன்கள் தமிழகம் எங்கிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த டோக்கன்களும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளாலேயே வழங்கப்பட்டு வருகின்றன.

ஈபிஎஸ் – எஸ்.பி.வி. மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்

ஆகவே, தாங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, முதலமைச்சர், அமைச்சர்கள் படத்துடன் டோக்கன்கள் வழங்க தடை செய்ய வேண்டும்.

மேலும், ஆளுங்கட்சி நிர்வாகிகள் டோக்கன்கள் வழங்குவதையும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும் இந்த கோரிக்கை மனுவினை அனுப்பி இருக்கிறார் பாரதி.

ஈபிஎஸ் – எஸ்.பி.வி. மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்பு புகார்