பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா? ஸ்டாலின் கேள்வி

 

பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா? ஸ்டாலின் கேள்வி

பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா? என்ற கேள்வியை எழுப்பினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சார்பில் நடைபெற்ற ’தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக உரையாற்றினார்.

பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா? ஸ்டாலின் கேள்வி

அவர் பேசியபோது, ‘’எத்தனையோ மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடந்திருந்தாலும் கூட, திருவாரூர்-நாகை மாவட்டங்கள் என்பதால் எனக்கே கொஞ்சம் கூடுதல் பாசம் வந்துவிடுகிறது. கலைஞரை நமக்கு தந்த மாவட்டம் இது. அதனால் ஒருவித நெகிழ்ச்சியோடு நான் நின்று கொண்டிருக்கிருக்கிறேன்’’ என்றார்.

பின்னர், ‘’மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தீர்களே, என்ன செய்தீர்கள் என்று நான் மாலையில் கேள்வி எழுப்புவேன் என்பதை உணர்ந்து காலையிலேயே அவசர அவசரமாக மயிலாடுதுறை மாவட்டத்தினை தொடங்கி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா? ஸ்டாலின் கேள்வி

கடந்த மார்ச் 24ம் தேதி மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தார். ஏப்ரல் 7ம் தேதி இதற்கான அரசாணை வெளியானது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆட்சியர் அலுவலகம் எங்கே? தரங்கம்பாடி சாலையில் இருக்கின்ற ஆர்டிஓ அலுவலகத்தின் பங்களாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. அதேபோல், வேளாண் அலுவலத்தில்தான் எஸ்.பி. அலுவலகமும் இருக்கிறது. இதற்கு பெயர்தான் புதிய மாவட்டமா?’’என்று கேட்கிறார்.

மேலும், ‘’புதிய மாவட்டம் உருவானால் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டாமா? சும்மா பேர் வைத்தால் மட்டும் போதுமா? பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா? என்று கேட்பார்கள். ஒரு முதலமைச்சர் இந்த மாதிரி நடந்துகொள்ளலாமா?’’என்ற கேள்வியை எழுப்புகிறார்.