1930ல் ஜெர்மனியில் என்ன நடந்ததோ அதுதான் இப்போது நம் நாட்டில் நடக்கிறது….. அமரீந்தர் சிங்

 

1930ல் ஜெர்மனியில் என்ன நடந்ததோ அதுதான் இப்போது நம் நாட்டில் நடக்கிறது….. அமரீந்தர் சிங்

1930ல் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் என்ன நடந்ததோ அதுதான் இப்போது நம் நாட்டில் நடக்கிறது என அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றியது. சிரோமனி அகாலி தளம் தீர்மானத்தை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் சட்டப்பேரவையில் முதல்வர் அமரீந்தர் சிங் பேசியதாவது: கேரளாவை போன்று பஞ்சாப் காங்கிரஸ் அரசும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

ஹிட்லர்

இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தின் அபாயத்தை புரிந்து கொள்ள அடால்ப் ஹிட்லரின் மெயின் கேம்ப் புத்தகத்தை படியுங்கள். நான் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகத்தை வேண்டுமானால் உங்களுக்கு வழங்குகிறேன். 1930ல் ஹிட்லரின் ஆட்சி காலத்தில் ஜெர்மனியில் என்ன நடந்ததோ அதுதான் தற்போது நம் நாட்டில் நடக்கிறது.

சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்

அப்போது ஜெர்மனியர்கள் பேசவில்லை. அதனால் பின்னால் வருத்தப்பட்டார்கள். ஆனால் நாம் இப்போது பேசுகிறோம் அதனால் பின்னால் வருத்தப்பட மாட்டோம். தெளிவாக, வரலாற்றிலிருந்து எந்தவித பாடமும் கற்று கொள்ளப்படவில்லை. தற்போது நம் நாட்டில் நடந்து கொண்டிருப்பவை தேசத்துக்கு நல்லது இல்லை. அதனால்தான் மக்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.