அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள்.. அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் தகவல்

 

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள்.. அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் தகவல்

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன் தான் கூட்டணி என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள்.. அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் தகவல்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவித்தாலும், அக்கட்சியுடன் கூட்டணி சேரும் பாஜக அதை ஏற்க மறுக்கிறது. முதல்வர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கூட்டம் நடத்தி, அதில்தான் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. அதிமுக அமைச்சர்கள் செல்லூர்ராஜூவும், மாபா பாண்டியராஜனும் தேசிய கட்சி என்பதால் பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகள்.. அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் தகவல்

ஆனால், அமைச்சர் ஜெயக்குமார், கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரைத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘’நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணிதான் இப்போதும் தொடர்கிறது. மேலும் பல கட்சிகள் பேச்சுவார்தையில் உள்ளன. யார் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வோருடன் தான் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று தெரிவித்தார்.