கூட்டணி களேபரம்.. முதல்வரை சந்தித்த முருகன்

 

கூட்டணி களேபரம்.. முதல்வரை சந்தித்த முருகன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்தித்து பேசினார். தலைமைச்செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பின்போது தேசிய கல்விக்கொள்கைக்காக தமிழக பாஜக பெற்ற 40 லட்சம் கையெழுத்து பிரதிகளை முதல்வரிடம் கொடுத்துள்ளார் முருகன்.

கூட்டணி களேபரம்.. முதல்வரை சந்தித்த முருகன்

பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக சொல்லியும், அதிமுகவுடன் கூட்டணியா என்பதை இதுவரையிலும் பாஜக சொல்லாமல் வருவதாலும்,
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் முரண்டு பிடிப்பதாலும் பாஜக – அதிமுக இடையே கசப்பு நிலவி வந்தது.

முதல்வர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் என்று சொன்னதால், நேற்று நடந்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் பாஜகவை கடுமையாக போட்டு வறுத்தெடுத்தனர்.

கருங்காலி கூட்டம், கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சமயத்தில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட நினைக்கிறது என்று பாஜகவை கடுமையாக விமர்சித்தனர் அதிமுக முக்கிய நிர்வாகிகள்.

அதுவரைக்கும் கூட்டணி பற்றி தலைமைதான் முடிவெடுக்கும் என்று சொல்லி வந்த பாஜகவினர், நேற்று அதிமுக கொடுத்த அடியில், அதிமுகவுடந்தான் கூட்டணி என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னார்.

இப்படியான கூட்டணி களேபரத்தில், முதல்வரை இன்று முருகன் சந்தித்திருப்பதால், கூட்டணி தொடர்பான பேச்சு நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. எடப்பாடியை சமாதானப்படுத்தவே இந்த சந்திப்பு நடந்திருக்கிறது என்று தெரிகிறது.