கூட்டணி ஆட்சிதான்… அதிமுகவுக்கு முருகன் கொடுத்த பதிலடி

 

கூட்டணி ஆட்சிதான்… அதிமுகவுக்கு முருகன் கொடுத்த பதிலடி

கூட்டணி ஆட்சி எல்லை என்பதை நேற்றைய அதிமுக பிரச்சாரத்தில் திட்டவட்டமாக தெரிவித்த பின்னரும் கூட கூட்டணி ஆட்சிதான் என்று அடித்துச்சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் முருகன்.

பாஜகவுக்கு எதிராக ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் நேற்றைய கூட்டத்தில் பேசாவிட்டாலும் கூட, மற்றவர்களை பேச விட்டு ரசித்தார்கள்.

கூட்டணி ஆட்சிதான்… அதிமுகவுக்கு முருகன் கொடுத்த பதிலடி

கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தேசியகட்சிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. ஆனால், கருங்காலி கூட்டமாக தமிழகத்திற்குள் நுழைய பார்க்கிறார்கள் தேசிய கட்சியினர் என்று பேசிய கே.பி.முனுசாமி, பெரியார் காலத்தில் இருந்து திராவிட இயக்கத்தினை ஒழிக்க வேண்டும் என்று அலையும் கூட்டம், திராவிட இயக்க ஆட்சியில் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சொல்லிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காலத்தில் சிலர் உள்ளே நுழுந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அழுத்தமாக.

கூட்டணி ஆட்சிதான்… அதிமுகவுக்கு முருகன் கொடுத்த பதிலடி

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் இந்த பேச்சில், சிலர், தேசிய கட்சி என்று சொன்னாலும் அவர் பாஜகவைத்தான் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இதன் பின்னர் நேற்று மாலையில் விழுப்புரத்தில் பாஜக சார்பில் நடந்த மாநாட்டில் பேசிய முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பாஜக சகோதரன், எனது பாஜக சகோதரி சட்டமன்றத்திற்குள் அமர்ந்தே ஆக வேண்டும் என்றார்.

கூட்டணி ஆட்சிதான்… அதிமுகவுக்கு முருகன் கொடுத்த பதிலடி

அவர் மேலும், வரும்காலம் பாஜகவின் காலம்தான் என்பதையும், வருகிற ஆட்சி தேசிய ஜன்நாயக கூட்டணியின் ஆட்சிதான் என்பதையும் நிர்ணயம் செய்துவிடுவோம் என்றார்.

கூட்டணி ஆட்சி எனும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக சொன்ன பின்னரும் கூட, கூட்டணி ஆட்சிதான் என்று பாஜக பிடிவாதமாக சொல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.