விவசாயி முதல்வர் இதைச் செய்வாரா? விசிக எம்.பி.யின் கேள்வி

விவசாயி முதல்வர் இதைச் செய்வாரா?  விசிக எம்.பி.யின் கேள்வி

தானும் ஒரு விவசாயிதான் எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் உற்பத்தி செலவுகளுக்குமேல் 50% அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணையிக்கவேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை சட்டமாக்குவாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட எம்.பி. ரவிக்குமார்.

விவசாயி முதல்வர் இதைச் செய்வாரா?  விசிக எம்.பி.யின் கேள்வி

ஒரு சாதாரண விவசாயியாக இருந்து அரசியலில் உயர்ந்து முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி. அப்படிப்பட்டவர் புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசுவதால், விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார் முதல்வர் என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

விவசாயி முதல்வர் இதைச் செய்வாரா?  விசிக எம்.பி.யின் கேள்வி

ஆனால், அந்த வேளாண் திட்டங்களால் விவசாயிகளூக்கு நன்மையே இருக்குது என்கிறார் முதல்வர். அப்படியானால் அதை ஒரு மேடை போட்டு விளக்குங்கள் என்கிறார் நாம் தமிழர் கட்சி்யின் சீமான்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட எம்.பி. ரவிக்குமார் முதல்வருக்கு இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார்.