கோவை சிறுமிக்கும், விழுப்புரம் ஆசிரியைக்கும் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

கோவை சிறுமிக்கும், விழுப்புரம் ஆசிரியைக்கும் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் மான் கி பாத் நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வரும் பிரதமர் நரேந்திரமோடி, இந்த ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக, 72வது நிகழ்ச்சியாக இன்று காலையில் பேசினார்.

கோவை சிறுமிக்கும், விழுப்புரம் ஆசிரியைக்கும் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் கோவை சிறுமி காயத்ரி பற்றியும் விழுப்புரம் ஆசிரியை ஹேமலதா பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார் மோடி.

கோவை சிறுமிக்கும், விழுப்புரம் ஆசிரியைக்கும் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

கோவையை சேர்ந்த சிறுமி காயத்ரி, பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக தனது தந்தையுடன் இணைந்து ஒரு சக்கர நாற்காலி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். மனதில் அன்பும் கருணையும் இருந்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்று சொன்ன மோடி, அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

கோவை சிறுமிக்கும், விழுப்புரம் ஆசிரியைக்கும் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!

கொரொனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாததால், புத்தகத்தின் அத்தியாயங்களை அனிமேஷன் வீடியோவாக மாற்றி அதை பென் டிரைவில் காப்பி செய்து மாணவர்களுக்கு கொடுத்து, மேலும் செல்போன் வாயிலாகவும் வழிநடத்தி வந்துள்ளார் விழுப்புரம் ஆசிரியை ஹேமலதா. அவருக்கும் என் வாழ்த்துக்கள் என்று சொன்னார்.