கருங்காலி கூட்டம்… பாஜகவை கடுமையாக சாடிய அதிமுக

 

கருங்காலி கூட்டம்… பாஜகவை கடுமையாக சாடிய அதிமுக

கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தேசியகட்சிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. ஆனால், கருங்காலி கூட்டமாக தமிழகத்திற்குள் நுழைய பார்க்கிறார்கள் தேசிய கட்சியினர் என்று பேசி கே.பி.முனுசாமியின் பேச்சு பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரு்ந்தது.

கருங்காலி கூட்டம்… பாஜகவை கடுமையாக சாடிய அதிமுக

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் தொடக்க உரை ஆற்றினார்.

கருங்காலி கூட்டம்… பாஜகவை கடுமையாக சாடிய அதிமுக

அமைச்சர் ஜெயக்குமாரை அடுத்து வைத்திலிங்கம் உரையாற்றினார். இதையடுத்து பேசிய கே.பி.முனுசாமியின் பேச்சு பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரு்ந்தது.

மேலும், அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வாரிசு அரசியலை விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் முனுசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.