கட்டிங்கை போட்டுவிட்டு ஒரு லெக் பீசை கடித்து இழுக்கும் ஆசாமிகள் அதிர்ச்சி

 

கட்டிங்கை போட்டுவிட்டு ஒரு லெக் பீசை கடித்து இழுக்கும் ஆசாமிகள் அதிர்ச்சி

கட்டிங்கை போட்டுவிட்டு, ஒரு லெக் பீசை கடித்து இழுக்கும் ஆசாமிகள் எல்லாம் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

டிசம்பர்-28ம் தேதி முதல் மருந்து அருந்த வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை (India Meteorological Department- IMD) எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஐ.எம்.டி.யின் எச்சரிக்கையினால் புத்தாண்டு கொண்டாட்ட பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டிங்கை போட்டுவிட்டு ஒரு லெக் பீசை கடித்து இழுக்கும் ஆசாமிகள் அதிர்ச்சி

ஐ.எம்.டியின் எச்சரிக்கையினால் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பது வட இந்தியர்கள்தா. காரணம் என்னவென்றால், அவர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி, உத்தரபிரதேசம், வடக்கு ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் வழக்கத்தை விடவும் குளிர் அதிகமாக இருக்கும். நீண்ட காலமாக குளிர் இருந்து வருவதால், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வரும் பிப்ரவரி மாதம் வரையிலும் இந்த குளிர் அலை இருக்கும். கடும் குளிர்ச்சியின் காரணமாக உடல் வெப்பநிலை குறையும். இதில் மது குடித்தால் மேலும் உடல் வெப்பநிலை குறையும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது ஐ.எம்.டி.

கட்டிங்கை போட்டுவிட்டு ஒரு லெக் பீசை கடித்து இழுக்கும் ஆசாமிகள் அதிர்ச்சி

வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள் என்றும் அறிவுறுத்துகிறது ஐ.எம்.டி.

மது கூடாதா…பழங்களா.. என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள் கட்டிங்கை போட்டுவிட்டு, ஒரு லெக் பீசை கடித்து இழுக்கும் ஆசாமிகள் எல்லாம்.