வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

 

வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார்  பதிலடி

சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசியஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா என்ற கேள்விக்கு, அமைச்சர் பதிலளிக்க மறுத்து, நழுவிவிட்டார்.

வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார்  பதிலடி

இதனால், எடப்பாடியாரே கேட்டீங்களா கதையை? மாநில துணைத் தலைவர் மட்டுமல்ல மத்தியஅமைச்சரும் உங்களுக்கு விளையாட்டு காட்டுகிறார் என்று சொன்னார் சிபிஎம் அருணனன். தமிழக பாஜக தலைவர் முருகன், கூட்டணி குறித்து கேட்கும்போதெல்லாம், கட்சி மேலிடம் அறிவிக்கும் என்றே சொல்லி வருவது குறித்து இவ்வாறு சொன்னார்.

துணை தலைவர் அண்ணாமலையும் அதையே சொல்லி வருகிறார்.

வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார்  பதிலடி

இந்நிலையில், இன்று பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கூட்டணி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வரும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டுமே அஇஅதிமுக கூட்டணியில் தொடர முடியும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.