முதல்வர் வேட்பாளர்…. பாஜகவின் இன்றைய அதிரடி

 

முதல்வர் வேட்பாளர்…. பாஜகவின் இன்றைய அதிரடி

முதல்வர் வேட்பாளர் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிரடி கொடுத்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக இன்றைக்கும் ஒரு பெரும் அதிரடியை கொடுத்திருக்கிறது.

முதல்வர் வேட்பாளர்…. பாஜகவின் இன்றைய அதிரடி

கூட்டணி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளதால் மேலும் பரபரப்பு எற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடந்தால்தான் பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டணி வேட்பாளரை தலைமைதான் அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் துணைத்தலைவர் அண்ணாமலை சொல்லி வந்த நிலையில், சென்னை பாஜவின் மேலிட பிரதிநிதி பிரகாஷ் ஜவடேகரும், அதையே தெரிவித்தார்.

முதல்வர் வேட்பாளர்…. பாஜகவின் இன்றைய அதிரடி

இந்நிலையில் இன்று, பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும், கூட்டணி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். அப்படியானால், எடப்படி பழனிச்சாமியை அறிவித்துள்ளதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிரடி கொடுத்தார்.

அப்படியானால் கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நிகழலாம் என்று அதிரடி மேல் அதிரடி கொடுத்ததால் அதிமுக அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறது.