ரஜினிக்கு வந்த அழுத்தம்.. சலசலப்பை ஏற்படுத்தும் மோடி, அமித்ஷாவின் மவுனம்

 

ரஜினிக்கு வந்த அழுத்தம்.. சலசலப்பை ஏற்படுத்தும் மோடி, அமித்ஷாவின் மவுனம்

ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பாஜகவினர் பலரும் ரஜினிகாந்த் குணமடைந்து திரும்ப வாழ்த்து சொல்லாமல் மவுனம் காத்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினிக்கு வந்த அழுத்தம்.. சலசலப்பை ஏற்படுத்தும் மோடி, அமித்ஷாவின் மவுனம்

ரஜினியின் பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால், அமித்ஷா மட்டும் வாழ்த்து சொல்லாததால், சென்னைவந்தபோது அமித்ஷாவை சென்று ரஜினி சந்திக்காததால்தான் அவர் வாழ்த்து சொல்லவில்லை என்ற பேச்சு எழுந்தது.

ரஜினிக்கு வந்த அழுத்தம்.. சலசலப்பை ஏற்படுத்தும் மோடி, அமித்ஷாவின் மவுனம்

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினியின் உடல்நிலை குறித்து, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை நேற்றைய தினமே ரஜினி தரப்பினரை தொடர்புகொண்டு விசாரித்துவிட்டு, சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

ஐதராபாத் மருத்துவமனையில் அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் நலமாக இருப்பதாக அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிக்கு வந்த அழுத்தம்.. சலசலப்பை ஏற்படுத்தும் மோடி, அமித்ஷாவின் மவுனம்

பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ரஜினி கட்சி தொடங்குகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ரத்த அழுத்தம் காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரஜினி. வரும் 31ம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், அண்ணாத்த அதன் காரணமாகவே விரைந்து முடித்து வந்த நிலையில் ரஜினி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும், அவர் டிஸ்சார் ஆக இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், மோடியும், அமித்ஷாவும் ரஜினியின் உடல்நிலை குறித்து எதுவும் சொல்லாதது, விசாரிக்காதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.