போலீஸ் பாதுகாப்புடன் பூஜை செய்யும் பெண் பூசாரி!

 

போலீஸ் பாதுகாப்புடன் பூஜை செய்யும் பெண் பூசாரி!

எங்களை காக்க வேண்டும் தாயி என்று துர்க்கை கோவிலுக்கு போனால் அங்கே போலீஸ் பாதுகாப்புடன் பூஜை செய்யும் பூசாரி வியப்பாகத்தான் தெரியும்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அடுத்த நல்லுதேவன் பட்டியை சேர்ந்தவர் பின்னியக்காள். இவரது குடும்பத்தினர் 10 தலைமுறையாக லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தின் துர்க்கை அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகின்றனர். பின்னியக்காள் தந்தை உடல்நலக்குறைவினால் இறந்துவிட்டதும், தந்தை செய்து பூசாரி பணியை பின்னியக்காள் மேற்கொண்டு வந்தார். ஆனால், கிராமத்தில் சிலர், பின்னியக்காள் பெண் என்பதால், ஒரு பெண் பூசாரியாக இருப்பதை விரும்பவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் பூஜை செய்யும் பெண் பூசாரி!

இதனால் அவர்களை எதிர்த்து போராடியபடியே பூசாரி பணிகளை செய்து வருகிறார். இன்று நேற்றல்ல, கடந்த 12 வருடங்களாக இப்படி போராடிக்கொண்டிருக்கிறார் பின்னியக்காள்.

போலீஸ் பாதுகாப்புடன் பூஜை செய்யும் பெண் பூசாரி!

உயர்நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் எல்லாவற்றிலும் பின்னியக்காளுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், ஊராரில் சிலர் இன்னமும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிருக்கு அச்சுறுத்தலும் இருப்பதால், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தால்தான் என்னால் மேற்கொண்டு பூசாரி பணியை செய்ய முடியும் என்று கேட்டதை அடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி நிஷாபானு, பின்னியக்காளூக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.