1918-இல் ஸ்பானிஷ் ஃப்ளுவில் இருந்து மீண்டு, தற்போது கொரோனாவில் இருந்தும் மீண்ட 106 வயது பாட்டி

 

1918-இல் ஸ்பானிஷ் ஃப்ளுவில் இருந்து மீண்டு, தற்போது கொரோனாவில் இருந்தும் மீண்ட 106 வயது பாட்டி

1918-இல் ஸ்பானிஷ் ஃப்ளுவில் இருந்து மீண்டு, தற்போது கொரோனாவில் இருந்தும் மீண்டு 106 வயது பாட்டி ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார்.

மாட்ரிட்: 1918-இல் ஸ்பானிஷ் ஃப்ளுவில் இருந்து மீண்டு, தற்போது கொரோனாவில் இருந்தும் மீண்டு 106 வயது பாட்டி ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார்.

உலகில் தொடர்ந்து அற்புதங்கள் நடக்கின்றன என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையில் அவற்றைக் காண வாய்ப்பு இல்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் இந்த கொரோனா தொற்றுநோய் சமயத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயினை தலைமையிடமாக கொண்ட தி ஆலிவ் பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 1918-ஆம் ஆண்டு, அனா டெல் வால்லே என்ற குழந்தை ஸ்பானிஷ் காய்ச்சலால் அவதிப்பட்டு மீண்டு வந்தது. ஸ்பானிஷ் காய்ச்சல் என்பது கொரோனா போன்றே வழக்கத்திற்கு மாறாக ஆபத்தான காய்ச்சல் தொற்றுநோயாகும். இது 36 மாதங்கள் உலகை (ஜனவரி 1918 முதல் டிசம்பர் 1920 வரை) ஆட்டிப் படைத்து 500 மில்லியன் மக்களைப் பாதித்தது. அதாவது அந்த நேரத்தில் உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு.

spanish flu

அனா டெல் வால்லேவுக்கு இப்போது ​​106  வயது ஆகிறது. அனா அக்டோபர் 1913 இல் பிறந்தார். இன்னும் 6 மாதங்களில் 107 வயதை நிறைவு செய்யவுள்ளார். இந்நிலையில், 102 ஆண்டுகளுக்குப் பிறகு இவரை மீண்டும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கியுள்ளது. ஆம். கொரோனா வைரஸ் பாதிப்பு இவருக்கு ஏற்பட்டது. வாலே அல்கலா டெல் வலேயில் உள்ள ஒரு மருத்துவ மனையில் வசித்து வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அங்கு அவர் மேலும் 60 குடியிருப்பாளர்களுடன் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தள்ளாத வயதில் கூட மனஉறுதியோடு கொரோனா வைரஸை எதிர்த்து சண்டையிட்ட அவர் அதை வென்றுள்ளார். தற்போது அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். இது அந்த பாட்டியின் குடும்பத்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற ஊடக அறிக்கையின்படி, ஸ்பெயினில் 101 வயதான இரண்டு பெண்களும் கொரோனா நோயிலிருந்து மீண்டுள்ளனர். ஸ்பெயினில் மொத்தம் 22,524 அதிகாரப்பூர்வ கோவிட் –19 தொடர்பான இறப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் 92,355 நோயாளிகள் நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், தினசரி கோவிட் –19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 367 ​​ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கோளிட்டுள்ள தகவல்களின்படி, தொற்றுநோயால் 195,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். உலகளவில் 2.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 781,000 பேர் மீண்டுள்ளனர்.