மு.மு.க . மாநில மாநாடு.. எஸ்.ஏ.சி. அதிரடி

 

மு.மு.க . மாநில மாநாடு.. எஸ்.ஏ.சி. அதிரடி

புதுச்சேரி எங்கிலும் முத்தமிழர் முன்னேற்ற கழகம் என்ற போஸ்டர், பேனர்களும் அதில் எஸ்.ஏ.சி. படத்தையும் பார்த்தை விஜய் ரசிகர்கள், மறுபடியும் முதல்ல இருந்தா என்றுதான் அதிர்ந்து போனார்கள்.

மு.மு.க . மாநில மாநாடு.. எஸ்.ஏ.சி. அதிரடி

விஜய்யின் சம்மதம் இன்றி கட்சி தொடங்கி, பின்னர் குடும்ப பிரச்சனையாகி கட்சியை களைத்ததோடு அல்லாமல், கட்சியின் தலைவரும் கைது செய்யப்பட்டு பரபரப்பு எல்லாம் இப்போதுதான் அடங்கியது.
அட, அதற்குள் மறுபடியுமா? என்றே அதிர்ந்து போனார்கள்.

மு.மு.க . மாநில மாநாடு.. எஸ்.ஏ.சி. அதிரடி

மாநில மாநாடு என்று நடைபெறும் இடத்திற்கு சென்றபோதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் என்பது தெரியவந்தது.

விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க போராடிப்பார்த்த எஸ்.ஏ.சந்திரசேகரையே முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்து படத்திற்கு இப்போதே பரபரப்பை கூட்டியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.