மூன்றாவது அணி அமைந்தாலும் பாஜகவின் முடிவில் மாற்றம் இருக்காது.. அண்ணாமலை

மூன்றாவது அணி அமைந்தாலும் பாஜகவின்  முடிவில் மாற்றம் இருக்காது.. அண்ணாமலை

பாஜகவுடன் தான்கூட்டணி என்று அதிமுக தலைமை வெளிப்படையாக அறிவித்த பின்னரும், அதிமுக அமைச்சர்களூம், நிர்வாகிகளும் அதையே சொல்லி வரும் நிலையில், கூட்டணி குறித்து மேலிடம்தான் அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தி வரும் நிலையில், துணைத்தலைவர் அண்ணாமலையும் அதே போலவே குழப்பம் ஏற்படுத்தி வந்த நிலையில், அதிமுக தரப்பில் இருந்தும், யார் வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்று பாஜகவுக்கு பதில் கொடுக்கும் விதமாக பேசப்பட்டது.

மூன்றாவது அணி அமைந்தாலும் பாஜகவின்  முடிவில் மாற்றம் இருக்காது.. அண்ணாமலை

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தில் பாஜக மண்டல அலுவலகத்திற்கு வந்த அண்ணாமலையிடம் இந்த கூட்டணி குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிமுக- பாஜக இடையேயான உறவில் எந்தவித குழப்பமும் இல்லை. இரு கட்சி இடையே நல்ல உறவு இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணியை சிறப்பாக ஒருங்கிணைத்து செல்கிறார் என்றார்.

மூன்றாவது அணி அமைந்தாலும் பாஜகவின்  முடிவில் மாற்றம் இருக்காது.. அண்ணாமலை

மேலும், பல சந்தர்ப்பங்களில் பாஜகவுக்கு அதிமுக உறுதுணையாக இருந்திருக்கிறது. கூட்டணி தர்மத்தின்படி பாஜக கூட்டணியில்தான் அதிமுக இருக்கிறது. இதில் எந்த குழப்பத்திற்கும் இடமில்லை என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைந்தாலும் பாஜகவின் கூட்டணி முடிவில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.