ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி .. கமல்

ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி .. கமல்

தந்தை பெரியார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவு தினம் இன்று.

மறைந்த எம்.ஜி.ஆரின் 33வது நினைவு தினத்தினை முன்னிட்டு, நாற்பதாண்டுகளுக்கு முன்னரே துவங்கிய நற்பணிகளுக்கான ஊக்கம் மக்கள் திலகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. நாளை நமதே எனும் எமது ஆப்த வாக்கியம் அவர் ஈந்தது. ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி. நாம் அதைச் செய்வோம் என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், #இனி_நாம் என்ற ஹேஷ்டேக்கினையும் ஷேர் செய்திருக்கிறார்.

ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி .. கமல்

அதே போல, தந்தை பெரியாரின் 47வது நினைவு தினத்தை முன்னிட்டு, பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தி அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாகத் தமிழகத்தை மாற்றிய பெரியாரின் நினைவுகளை அசை போடுகிறேன். பெரியார் அன்றும் இன்றும் என்றும் தேவையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஏழைகளே இல்லாமல் இருக்கச் செய்வதே அவர் நினைவைப் போற்றும் வழி .. கமல்

முன்னதாக அவர் சீரமைப்போம் தமிழகத்தை என்ற பிரச்சார பயணத்தில் தனக்கு கூடும் கூட்டம் பற்றி, கூடிக் கலையும் கும்பல் அல்ல. கூட்டி வரப்பட்ட கூட்டமும் அல்ல. இது சரித்திரம் படைக்கத் துணிந்தவர்களின் சங்கமம். நாமே தீர்வு எனும் முழக்கம் எம் சங்கநாதம். புதியதோர் புதுவை செய்வோம்! என்றும் தெரிவித்துள்ளார்.