மரியாதை மட்டுமல்ல; ஒரு பெரிய பொறுப்பினையும் தந்தது.. அரவிந்த்சாமி

மரியாதை மட்டுமல்ல; ஒரு பெரிய பொறுப்பினையும் தந்தது.. அரவிந்த்சாமி

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 33ஆவது நினைவுதினம் இன்று. 24.12.1897. மறைந்திருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட மக்களால் கொண்டாடப்படுகிறார். போற்றப்படுகிறார், வணங்கப்படுகிறார். அதனால்தான் அவர் மக்கள் திலகம்.

மரியாதை மட்டுமல்ல; ஒரு பெரிய பொறுப்பினையும் தந்தது.. அரவிந்த்சாமி

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அரவிந்த்சாமி, அந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் சினிமாவாக எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். கேடரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

மரியாதை மட்டுமல்ல; ஒரு பெரிய பொறுப்பினையும் தந்தது.. அரவிந்த்சாமி

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடைசிநாள் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆரின் வசீகரத்தை நெருங்க முயற்சித்திருக்கிறேன். அவர் அழகுக்கு அருகே செல்ல முயற்சி செய்திருக்கிறேன். அதற்கான கடைசி முயற்சித்தான் இது என்று மேக்கப் மேன் தனக்கு மேக்கப் போட்ட போட்டோவை வெளியிட்டிருந்தார்.

மரியாதை மட்டுமல்ல; ஒரு பெரிய பொறுப்பினையும் தந்தது.. அரவிந்த்சாமி

இந்நிலையில்,தலைவி படக்குழு எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடித்த போட்டோக்களை வெளியிட்டிருக்கிறது. அப்படத்தை ஷேர் செய்துள்ள அரவிந்த்சாமி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவை முன்னிட்டு தலைவியில் நடித்துள்ள எனது புதிய தோற்றங்களை வெளியிடுகிறோம். புரட்சித்தலைவரின் வேடத்தில் நடித்தது மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பையும் தந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இந்த கேரக்டரை கொடுத்ததற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.