நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. பிரதமர் மோடி

 

நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. பிரதமர் மோடி

லிஜியன் ஆப் மெரிட் எனும் அமெரிக்க அதிபர் விருதினை எனக்கு வழங்கியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த விருதினை வழங்கிய டொனால்ட் டிரம்புக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி.

நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. பிரதமர் மோடி

அமெரிக்க அதிபரால் வழங்கபடும் லிஜியன் ஆப் மெரிட் எனும் உயரிய விருதினை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்மாரிசன், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் ஜோ அபேவுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய பிரதமருக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. பிரதமர் மோடி

இதுகுறித்து பிரதமர் மோடி, லிஜியன் ஆப் மெரிட் எனும் அமெரிக்க அதிபர் விருதினை எனக்கு வழங்கியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். (அமெரிக்காவுக்கான இந்திய தூதர தரன் ஜித் சிங் சித்து இந்த விருதினை பெற்றுக்கொண்டார்)

இந்தியா -அமெரிக்கா இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உறவினை மேம்படுத்த இந்திய மற்றும் அமெரிக்க மக்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இது அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.. பிரதமர் மோடி

இதற்கு முன்பு இல்லாத வகையில் 21ம் நூற்றாண்டில் இருக்கும் சவால்களையும் சமாளித்து, மனிதகுலத்தின் நலனுக்கான இந்திய -அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்தும் இவ்விருது. இவ்விருதினை வழங்கிய டொனால்ட் டிரம்புக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய -அமெரிக்க உறவினை மேலும் வலுப்படுத்த அர்ப்பணிப்பு தொடரும் என்று இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் சார்பாக உறுதியான நம்பிக்கை அளிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.