ஜி..உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஓபிஎஸ்

 

ஜி..உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஓபிஎஸ்

பிரதமர் நரேந்திரமோடிக்கு, ‘லிஜியன் ஆப் மெரிட்’எனும் அமெரிக்க அரசின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்மாரிசன், ஜப்பான் பிரதமர்(முன்னாள்) ஷின் ஜோ அபே இந்த விருதினை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்திய பிரதமருக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

ஜி..உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஓபிஎஸ்

அமெரிக்கா -இந்தியா நாடுகளின் உறவை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்கியதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும், அதிபர் டிரம்ப் வழங்கிய இந்த விருதை மோடியின் சார்பில்

அமெரிக்காவுக்கான இந்திய தூதர தரன் ஜித் சிங் சித்து இந்த விருதினை பெற்றுக்கொண்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஜி..உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஓபிஎஸ்

சர்வதேச அமைதி, வளர்ச்சிக்கான பிரதமரின் கொள்கைகளூக்கும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த பிரதமர் கொண்ட கொள்கைகளுக்கும் இந்த விருது ஒரு அங்கீகாரம் என்றும், மத்திய வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திரமோடியின் கீழ் இந்தியா இயங்குகிறது. அவருக்கு உயரிய விருதினை அமெரிக்கா வழங்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளவர், ஜி..உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.