நீட் தேர்வு காரணமாக கோவை மாணவி தற்கொலை.. கனிமொழி வேதனை

 

நீட் தேர்வு காரணமாக கோவை மாணவி தற்கொலை.. கனிமொழி வேதனை

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் கோவையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு காரணமாக கோவை மாணவி தற்கொலை.. கனிமொழி வேதனை
தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பு கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், தனியாக கோச்சிங் வகுப்பு சென்று படிக்க முடியாத காரணத்தால் பல மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவு காணாமல் போகிறது. இதனால், உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

நீட் தேர்வு காரணமாக கோவை மாணவி தற்கொலை.. கனிமொழி வேதனை
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும், இந்த ஆண்டு விலக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடந்தே தீரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த கோவையைச் சேர்ந்த சுபஶ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

http://


இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, “நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.