திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில், 19 ஒடிசா மாநில பெண்கள் மீட்பு!

 

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில், 19 ஒடிசா மாநில பெண்கள் மீட்பு!

திருப்பூர்

திருப்பூரில் தனியார் பின்னலாடை நிறுத்தினரால் தனியறையில் அடைத்து வைக்கப்பட்ட ஒடிசாவை சேர்ந்த 19 பெண்களை, அதிகாரிகள் மீட்டனர்.

திருப்பூர் 15 வேலாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஓடிசாவை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் பயிற்சிக்காக வந்து தங்கியிருந்து வருகின்றனர். கடந்த மாதம் இவர்களில் சிலர் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மற்றவர்களும் ஓடிசா செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில், 19 ஒடிசா மாநில பெண்கள் மீட்பு!

ஆனால், பின்னலாடை நிர்வாகத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தியதுடன், அவர்களது செல்போன்களை பறித்துக்கொண்டு தனியறையில் அடைத்து வைத்துள்ளனர்.இதுகுறித்து, ஓடிசாவிற்கு சென்ற தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில், அம்மாநில நிர்வாகம் சார்பில் திருப்பூர் ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆட்சியர் உத்தரவின் பேரில், இன்று திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் சம்பந்தபட்ட நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது, தனியறையில் அடைக்கப்பட்டிருந்த 19 பெண்களை மீட்ட அதிகாரிகள், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.