சென்னையில் 19 கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றம்!

 

சென்னையில் 19 கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றம்!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் 19 கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றம்!

இந்நிலையில் வரும் 12 ஆம் தேதிக்குள் சென்னையில் உள்ள 19 கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இம்மையங்களில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றும் சளி, காய்ச்சல் லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் அனைவருமே அனுமதிக்கப்படுவார்கள். தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே இனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படுக்கைகளின் தேவை அதிகரித்து வருவதாலும், மருத்துவமனையிகள் படுக்கை பற்றாக்குறை நிலவுவதாலும் இத்தகைய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 8 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் ஐசிஎம்ஆர் விதிப்படி தலா 300 படுக்கைகள் உள்ளன. அத்துடன் ஏற்கனவே போதுமான மருத்துவர்கள், செவிலியர்களும் இருக்கின்றன. எனவே 2400 தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கான வசதி கிடைத்துவிடுமென கணக்கிடப்படுகிறது.