சலசலப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் – சமாளித்த ஈபிஎஸ்

 

சலசலப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் – சமாளித்த ஈபிஎஸ்

அதிமுகவில் சின்னத்தைப்போலவே தலைமையும் கூட இரட்டை தலைமைதான். இப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறார். ஆனால், ஓபிஎஸ் அமைதியாக வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட அவர் வராமல் இருக்கட்டும், வழக்கமாக பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகளையும் கூட ரத்து செய்துவிட்டு, அமைதியாக இருந்து வருகிறார் ஓபிஎஸ்.

சலசலப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் – சமாளித்த ஈபிஎஸ்

இதனால் மீண்டும் ஒரு தர்மயுத்தத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த ஓபிஎஸ், கடைசி நேரத்தில் பலரின் சமாதானத்தினால் இறங்கி வந்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியை முறைப்படி அறிவித்தார்.

அதுபோலவே, அதிமுகவின் பிரச்சாரத்தின் தொடக்கத்திலும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் இணைந்துதான் தொடங்க வேண்டும். முதல்வர் முதலில் தொடங்குகிறார் என்றாலும் கூட, ஓபிஎஸ் தொடங்கி வைத்திருக்க வேண்டும். அது நடைபெறாததாலும், ஓபிஎஸ்சும் வீட்டுக்குள்ளேயே இருந்ததாலும் கட்டி வட்டாரத்தையும் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பு உண்டானது.

சலசலப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் – சமாளித்த ஈபிஎஸ்

மீண்டும் முதல்வர் வேட்பாளர் கேட்டு பிடிவாதமா? அதனால்தான் பாஜகவும் முதல்வர் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லி வருகிறதா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸ்சுடன் ஈபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இன்று காலையில்,
டிசம்பர் 27ல் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தொடங்கி வைக்கிறார்கள் என்றும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் இந்த முதல்பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்றும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது அதிமுக.

சலசலப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் – சமாளித்த ஈபிஎஸ்

மேலும், ஜனவரி 9ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர் என்பதால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு முழு அதிகாரமும் வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டிருந்ததில், பொதுக்குழுவில்தான் அதற்கு ஒப்புதல் பெற்றால்தான் அது உறுதியாகும் என்பதால், பொதுக்குழுவை கூட்டுவதற்காகத்தான் ஓபிஎஸ் திடீர் பிரேக் அடித்திருக்கிறார் என்றே பேச்சு எழுந்திருக்கிறது.