Home இந்தியா எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

நடிகர்களுக்கு கட்-அவுட் வைப்பதும், பாலாபிஷேகம் செய்வதும் ரசிர்களின் வழக்கம்தான். ஆனால், பெரும்பாலான நடிகர்களுக்கு ரசிகர்கள் சிலை வைத்தும் தங்கள் பிரியத்தை காட்டுகிறார்கள்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பல இடங்களில் சிலை இருக்கிறது. வெறும் நடிகர் என்பதற்காக மட்டுமே அவருக்கு சிலை வைக்கப்படவில்லை. நடிகர் என்பதையும் தாண்டி, வாரிக்கொடுக்கும் வள்ளலாகவும், சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் என்பதாலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

ரசிகர்கள் ஒரு படி மேலே போய் பக்தர்களாகவும் மாறிவிடுகிறார்கள். சிலைக்கு அடுத்தபடியாக, கோவில். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், ஆந்திராவில் என்.டி.ஆருக்கும் கோவில்கட்டி வணங்கி வருகிறார்கள். நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டியதை எல்லாம் இதில் சேர்க்க முடியாது. அது வேறு ரகம்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

இந்நிலையில், இந்தி நடிகர் சோனுவுக்கும் கோவில் கட்டி வணங்குகிறது ஒரு கிராமம். இந்தி நடிகர் ஒருவருக்கு தெலுங்கானாவில் கோவில் கட்டி வணங்குவது என்றால் அது சாதாரன விசயம் அல்ல. அதுவும் வில்லன் நடிகருக்கு கோவில் கட்டி வணங்குகிறார்கள்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஹீரோக்களாக இருந்வர்கள். ஆனால், சோனு வில்லன் நடிகர். வில்லன் நடிகராக இருந்தாலும் ரியல் ஹீரோ என்பதால்தான் சோனுவுக்கு கோவில் கட்டி வணங்குகிறார்கள்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

ஏழை, எளிய மக்களுக்கும், மலைக்கிராமத்தினருக்கும் தொடர்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகிறார் சோனு. கொரோனா கொடுங்காலத்திலும் கூட, சொத்துக்களை அடகுவைத்தும் உதவிகள் செய்து வருகிறார். அவரின் இந்த மனிதாபிமானத்தை பார்த்துதான், ஐநாவும் அவருக்கு விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

ஊரடங்கினால் அவதிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுத்திருக்கிறார் சோனு. வெளிநாட்டில் தவித்த மருத்து மாணவர்கள் தமிழகம் திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்தவர் சோனு. ஆன்லைன் படிக்க டவர் வசதி இல்லாத மலை கிராமத்திற்கு டவர் அமைத்துக்கொடுத்தவர். இன்னும் போனிலும், கடிதம் மூலமாகவும் உதவி கேட்போருக்கு சோனு சூட்டின் உதவிக்கரம் நீண்டுகொண்டே இருக்கிறது.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!

அதனால்தான், தெலுங்கானா மாநிலத்தில் சித்திப்பேட்டை மாவட்டம் துபண்டா கிராமத்தில், சிற்பி மதுசூதனன், சோனு சூட்டுக்கு கோவில் கட்டி சிலை எழுப்பி இருக்கிறார். அக்கிராமத்தினர் பாரம்பரிய உடை அணிந்து வந்து, நாட்டுப்புற பாடல்கள் பாடி, தீபம்காட்டிசோனுவை வணங்கி வருகிறார்கள்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆருக்கு பிறகு கோவில் கட்டி கொண்டாடப் படும் நடிகர் சோனு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65 உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். அதன் பிறகே அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அரசு வெளியிடும்...

வங்கிகளின் வேலை நேரம் மேலும் குறைப்பு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்...

ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா? – அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்

கொரோனா தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

இந்தியா முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இது தற்காலிக தீர்வு தான் என்று கூறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து...
- Advertisment -
TopTamilNews