வாழ்வா? சாவா? -ஸ்டாலின் ஆவேசம்

 

வாழ்வா? சாவா? -ஸ்டாலின் ஆவேசம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் பகுதி கழக செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது,

’’ நான் வெற்றி பெற்றால் போது என்று நினைக்காமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என அனைவரும் நினைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வர முடியும்.

வாழ்வா? சாவா? -ஸ்டாலின் ஆவேசம்

ஒரு கை ஓசையாகாது. தனிமரம் தோப்பாகாது. தனி வீடு ஊர் ஆகாது. தனி மனிதன் குடும்பம் ஆக மாட்டான். நான் என்பதை மறந்து நாம் என மாறினால் நாம் வெற்றி பெறலாம்.

சிலர் பேசும்போது வாழ்வா? சாவா? என்பது மாதிரி என்று சொல்வார்கள். அந்த உதாரணமே தவறானது. வாழ்வதற்காகத்தான் அனைவரும் முயற்சிக்கிறார்கள். வாழ்வா சாவா என்பது முயற்சிக்காதவர்கள் சொல்லும் சமாதானம்.

ஐந்து முறை ஆட்சி்யில் இருந்திருக்கிறோம். கடந்த முறையும் நாம்தான் வந்திருக்க வேண்டியது. 6வது முறையும் நாம் தான் வரப்போகிறோம்.

இது தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக வியூகங்களை நாங்கள் அமைத்திருந்தாலும் நீங்களும் அதற்கான தனி வியூகங்களை அமைத்திட வேண்டும். இவர்கள் நிற்கும் தொகுதியில் பணம் அதிகம் விளையாடும். அதனை நாம் நமது பலத்தால் வெல்ல வேண்டும்’’என்று ஆவேசம் காட்டினார்.