சட்டமன்றத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்… பகீர் கிளப்பும் ராமமோகன்ராவ்

 

சட்டமன்றத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்… பகீர் கிளப்பும் ராமமோகன்ராவ்

ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்து, ஜெ.,வுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்து, பின்னர் தமிழக தலைமை செயலாளர் ஆனவர் ராமமோகன்ராவ். ஜெயலலிதா மறைந்த தினத்தின்போது மணல் அதிபர் சேகர் ரெட்டியுடன் பேசியது தொடர்பான ஆதராங்களுடன் சிக்கி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

சட்டமன்றத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்… பகீர் கிளப்பும் ராமமோகன்ராவ்

தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக தலைமை செயலகத்திற்குள் வருமான வரி சோதனை நடத்தும் அளவுக்கு கொண்டு வந்தவர் ராமமோகன்ராவ் என்ற கடும் விமர்சனம் எழுந்தது. தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக தலைமை செயலாளர் ஒருவர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படு்த்தியது.

ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த இவர், தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை ஒன்றிணைத்து மக்கள் இயக்கம் உருவாக்குவதாக சொல்லி வந்தவர், கடந்த ஆண்டு தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் அரசியல் ஆலோகராக நியமிக்கப்பட்டார்.

சட்டமன்றத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்… பகீர் கிளப்பும் ராமமோகன்ராவ்

இந்நிலையில், மதுரையில் நடந்த இந்து ஜனநாயக முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ஜெயலலிதாவின் மறைவு, சேகர் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசின விவகாரம், சட்டமன்றத்திற்குள் ராணுவம் நுழைந்தது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தவர், சுயசரிதை எழுதுவீர்களா என்ற கேள்விக்கு மட்டும், நான் சுயசரிதை எழுதினால் சில உண்மைகள் வெளியே வரும். அதனால் பல பிரச்சனைகள் வரும். பலருக்கு பிரச்சனை ஏற்படுமே’’என்றார்.