ஸ்டாலினோட பதநீர் கதை… சொல்லிச்சொல்லி சிரித்த சீமான்

 

ஸ்டாலினோட பதநீர் கதை… சொல்லிச்சொல்லி சிரித்த சீமான்

ஸ்டாலின் கேட்ட அந்த கேள்வியை சொல்லிச்சொல்லி சிரித்தார் சீமான். உடன் இருந்த கட்சியினரும் பலமாக சிரித்தனர்.

ஸ்டாலினோட பதநீர் கதை… சொல்லிச்சொல்லி சிரித்த சீமான்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது பிரச்சாரம் செய்த ஸ்டாலின், அந்தோணியார் புரத்தில் பனை ஓலை பட்டையில் மக்கள் தந்த பதநீர் வாங்கி குடித்தார். கனிமொழியும் வாங்கி குடித்தார். பதநீரை குடித்த ஸ்டாலின், ‘’ ரொம்ப டேஸ்ட்டாக இருக்குது. நல்ல இனிப்பா இருக்குது. இதுல சர்க்கரை போட்டிருக்காங்களா?’’என்று கேட்டார்.

அதைக்கேட்டதும் சிரித்த மக்கள், ‘’பனையில் இருந்து வடித்து எடுக்கிறபோதே இதே இனிப்போடுதான் இருக்கும். சுண்ணாம்பு மட்டும் சேர்ப்போம்’’என்றனர்.

ஸ்டாலினோட பதநீர் கதை… சொல்லிச்சொல்லி சிரித்த சீமான்

இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறை நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மாநில ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலிகான் மற்றும் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், சீக்கிய எழுத்தாளர், அரசியலறிஞர் அஜய்பால் சிங் பிரார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக,சீமான் கண்டன உரையாற்றினார்.

ஸ்டாலினோட பதநீர் கதை… சொல்லிச்சொல்லி சிரித்த சீமான்

பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, தான் விவசாயி என்று முதல்வர் சொல்வதால் ஸ்டாலினும் விவசாயிதான் என்கிறாரே? என்று கேட்டனர்.

அதற்கு, ‘’எடப்பாடி விவசாயி என்று சொல்வதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவர் அமைச்சர் ஆவதற்கு முன்னாடி விவசாயம்தான் செய்து வந்தார். அதனால் சொல்கிறார். அவர் உண்மையிலேயே விவசாயிதான். ஆனால், ஸ்டாலின் எந்த விவசாயம் பார்த்தார் விவசாயி என்று சொல்வதற்கு? ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்குது? அப்படி விவசாயி என்றால் ஒரு நாள் வயலில் ஏர் பிடித்து உழச்சொல்லுங்க பார்ப்போம். விதைக்கச்சொல்லுங்க பார்ப்போம்’’என்று சொன்ன சீமான்,

ஸ்டாலினோட பதநீர் கதை… சொல்லிச்சொல்லி சிரித்த சீமான்

’’பதநீர் இனிப்பாக இருக்கிறது. சர்க்கரை போட்டிருக்காங்களான்னு கேட்கிறார். அவர் போய் விவசாயியா…’’என்று சொல்லிவிட்டு சீமான் சிரிக்க, உடன் இருந்தார்கள் கைதட்டி, விசிலடித்த சிரித்தனர்.

பின்னரும் சீமான் சிரித்துக்கொண்டே, ’’எந்த விவசாயி கரும்பு தோட்டத்துக்குள்ள சிமெண்ட் ரோடு போட்டு நின்னுக்கிட்டு இருக்கான் சொல்லுங்க? ’’என்று கேட்டார்.

ஸ்டாலினோட பதநீர் கதை… சொல்லிச்சொல்லி சிரித்த சீமான்