அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறாரா அமித்ஷா?

 

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறாரா அமித்ஷா?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மம்தாவின் நெருங்கிய நண்பருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் இந்த விவகாரம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறாரா அமித்ஷா?

வட இந்தியாவில் மேற்குவங்கத்தையும் கைப்பற்றும் பாஜக, தென்னிந்தி்யாவில் கர்நாடகாவை தொடர்ந்து கேரளா, தமிழகத்தையும் கைப்பற்றும் தீவிர முயற்சியில் இருக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறாரா அமித்ஷா?

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது என்று அதிமுவினர் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், பாஜக இதுவரை கூட்டணி தொடர்கிறது என்று சொல்லவில்லை. மேலும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் முருகனும், துணைத்தலைவர் அண்ணாமலையும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறாரா அமித்ஷா?

இந்நிலையில், சிபிஎம் மூத்த தலைவர், தமிக மக்கள் ஒற்றுமை மேடை பேராசிரியர் அருணன், ‘’அமித்ஷா வீசிய வலையில் திருணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். அடுத்து அதிமுக எம்எல்ஏக்கள்தான். அதனால்தான் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுக்கிறது பாஜக.’’என்று தெரிவித்திருக்கிறார்.

அதனால், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறாரா அமித்ஷா? என்று சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது தமிழக அரசியலில்.