அப்போது எதிர்க்காதவர் இப்போது கிழிக்கிறார்.. கமல், கெஜ்ரிவால் மீது திருமுருகன்காந்தி தாக்கு

அப்போது எதிர்க்காதவர் இப்போது கிழிக்கிறார்.. கமல், கெஜ்ரிவால் மீது திருமுருகன்காந்தி தாக்கு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு டெல்லி அரசு குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது. மேலும் டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வந்தார். அப்போது, ‘’போராடும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு பகத்சிங். ஆங்கிலேயர்களை விடவும் மோசமாக மாறிவிடக்கூடாது மத்திய அரசு’’என்று எச்சரித்த கெஜ்ரிவால், புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்தெறிந்து, தனது எதிர்ப்பை காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்போது எதிர்க்காதவர் இப்போது கிழிக்கிறார்.. கமல், கெஜ்ரிவால் மீது திருமுருகன்காந்தி தாக்கு

ஆனாலும், விவசாயிகளுக்கு ஆதரவு என்பதுபோல் கெஜ்ர்வால் நாடகம் ஆடுகிறார் என்றே பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘’அர்விந்த் கெஜரிவால் வேளாண் சட்ட நகல்களை தற்போது கிழித்து போட்டிருக்கிறார். இச்சட்டங்களை மோடி கொண்டுவந்த எதிர்க்காதவர், போராட்டம் வெடித்தபின் கிழிக்கிறார்.

அப்போது எதிர்க்காதவர் இப்போது கிழிக்கிறார்.. கமல், கெஜ்ரிவால் மீது திருமுருகன்காந்தி தாக்கு

‘ஊழலுக்கு எதிராக’ எனும் அரசியல்வாதிகள் என்றுமே இந்துத்துவ பாசிசத்தோடு சமரசம் காண்கிறவர்கள், ‘ஊழல் எதிர்ப்பு’ நடிகர்கள் உட்பட..’’என்று அரவிந்த் கெஜ்ரிவாலையும், கமல்ஹாசனையும் சாடுகிறார்.