காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக வறுபடும் கனிமொழி

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக வறுபடும் கனிமொழி

நான் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சேர்ந்திருக்கிறேன், எனது இன்ஸ்டாகிராம் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாற கீழேயுள்ள இணைப்பை பின்தொடரவும்! என்று கனிமொழி எம்.பி. நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைப்பு விடுத்த நேரமோ என்னமோ தெரியவில்லை, இன்ஸ்டாகிராம் செயலி சரிவர இயங்கவில்லை என ஆண்ட்ராய்வு பயனாளர்கள் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக வறுபடும் கனிமொழி

உலகம் முழுவதும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப், கூகுள் பே, உள்ளிட்ட கூகுளின் செயலிகள் செயல்படாமல் முடங்கியிருந்து பின்னர் சரி செய்யப்பட்டது போலவே இதுவும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக கனிமொழி இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு அழைப்பு விடுத்ததால்தான் இன்ஸ்டாகிராம் செயலியே செயல் இழந்து போச்சு என்று வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக வறுபடும் கனிமொழி

ஸ்பெக்ட்ரம் – இன்ஸ்டாகிராம் என்றெல்லாம் கணெக்ட் பண்ணியும் கமெண்ட் அடிக்கிறார்கள்.

கனிமொழி இன்ஸ்டாகிராம் வந்ததால்தான் கிராம்(தங்கம்) விலை ஏறிப்போச்சுன்னு சொல்லுறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக வறுபடும் கனிமொழி