‘கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை’ – ஹெச். ராஜா

‘கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை’ – ஹெச். ராஜா

வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படப் போவதில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

‘கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை’ – ஹெச். ராஜா

வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக – திமுக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த தேர்தல் களத்தில் ரஜினி – கமல் இருவரும் முதன்முறையாக களமிறங்கவுள்ளனர். ஏற்கனவே கமல் மக்களவை தேர்தலை எதிர்கொண்ட நிலையில்,ரஜினி அடுத்த மாதம் கட்சி ஆரம்பிப்பதன் மூலம் முதல்முறையாக தேர்தலை சந்திக்கவுள்ளனர். சட்டப்பேரவை என்ற வகையில் கமலுக்கும் இது முதல் தேர்தல் தான். இதில் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிக்கும் சிலர் கமலின் அரசியல் பயணத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.

‘கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை’ – ஹெச். ராஜா

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளனர். காரணம் ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக ஆரம்பரத்திலிருந்தே செயல்பட்டு வருவது தான். இதற்கு பாஜக குறித்த அவரின் முந்தைய பேட்டிகள் சாட்சி. அந்த வகையில் பாஜகவில் சர்ச்சைக்கு பெயர் போன ஹெச்.ராஜாவும் ரஜினியின் அரசியல் வருகைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

‘கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை’ – ஹெச். ராஜா

இந்நிலையில் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “பாஜகவின் கட்டுப்பாட்டில் ரஜினி இருக்கிறார் என்பது உண்மை அல்ல. கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு தான் பலவீனம். வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படப் போவதில்லை” என்றார்.