பச்சை எம்.ஜி.ஆர்., கிளிப்பச்சை எம்.ஜி.ஆர்… அடக்கடவுளே!

 

பச்சை எம்.ஜி.ஆர்., கிளிப்பச்சை எம்.ஜி.ஆர்… அடக்கடவுளே!

எம்.ஜி.ஆரை வைத்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்தபோது, ‘’புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்’’என்றார் கமல்.

மேலும் எதிர்ப்புகள் வலுத்தபோது, எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்… என்று கேள்விகளை எழுப்பினார்.

பச்சை எம்.ஜி.ஆர்., கிளிப்பச்சை எம்.ஜி.ஆர்… அடக்கடவுளே!

இதுகுறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், ‘’பச்சை எம்.ஜி.ஆர்., கிளிப்பிச்சை எம்.ஜி.ஆர். என்று ஏற்கனவே அரை டஜனுக்கும் மேலான ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இதில், எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என்கிறார் கமல். எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்கிறார் ரஜினி. அடக்கடவுளே.. ’’ என்று அதிர்ந்து போய் நின்று,

பின்னர், ‘’புரட்சித்தலைவர் தன் உதிரத்தின் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கத்தை இது. அரசியல் பிழைப்புக்காக சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள் புரட்சித்தலைவர் பெயரைச் சொல்லி அறுவடை செய்யலாம் என்று ஆசைப்பட்டால், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துகொண்டு, அவரின் கொள்கைகள் சிறக்க கழகத்தில் பணியாற்றலாம். அதை விட்டுவிட்டு தலைவரின் பெயரை சொல்லி தங்களை பலப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைப்பதும், பிழைக்கலாம் என்று நினைப்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம்’’ என்று கடுமையாக சாடி்யிருக்கிறது.