தடையை மீற திமுக முடிவு! கூட்டணியினரும் சம்மதமா?

 

தடையை மீற திமுக முடிவு! கூட்டணியினரும் சம்மதமா?

இடஒதுக்கீடு கோரி பாமகவினர் சென்னையில் நடத்தவிருந்த போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து திமுக நடத்தவிருந்த போராட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தடையை மீற திமுக முடிவு! கூட்டணியினரும் சம்மதமா?

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 22 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாளை சென்னையில் போராட்டம் நடத்த இருந்தனர்.

தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை 1897ல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் உத்தரவு கடந்த மே மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தடையை மீற திமுக முடிவு! கூட்டணியினரும் சம்மதமா?

ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வரும் 144 தடை உத்தரவு இம்மாதம் 31ம் தேதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவது என்று திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல். கூட்டணியினரும் திமுகவுடன் தடையை மீறி கைகோர்க்க முடிவெடுத்துள்ளதாகவே தகவல்.