ஆப்பு வைத்த நித்தியானந்தா!

 

ஆப்பு வைத்த நித்தியானந்தா!

கைலாசா என்ற தனி தேசத்தை உருவாக்கி அதிபர் ஆகிவிடும் முனைப்பில் இருக்கிறார் நித்தியானந்தா. அதற்காகத்தான் அவரும் தொடர்ந்து ஏதேதோ அறிவிப்புகளையும் அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறார்.

தற்போது அவர் விடுத்திருக்கும் அறிவிப்புதான், சரிதான் நாமும்தான் ஒருவாட்டி போய் பார்த்துவிடலாமே என்கிற ஆர்வத்தை பலருக்கும் தூண்டி விட்டிருக்கிறது.

ஆப்பு வைத்த நித்தியானந்தா!

கைலாசாவுக்கு மூன்று நாட்கள் வந்து செல்வதற்கு இலவச விசா தரப்படும். இலவச விமானத்தில் கைலாசா வந்து செல்லலாம். கைலாசாவில் தங்கும் அந்த மூன்று நாட்களுக்கும் உணவு, தங்குமிடம் இலவசம் என்று தெரிவித்துள்ளார் நித்தியானந்தா.

ஆஸ்திரேலியாவில் இருந்து ‘கருடா’என்ற சிறிய விமானம் கைலாசாவிற்கு வரும். அதில்தான் வருவதற்குத்தான் இலவச கட்டணம். ஆஸ்திரேலியா வரை உங்கள் சொந்த செலவில்தான் வரவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியா மக்களுக்கு அதிர்ஷ்டம்தான் போங்க.

ஆப்பு வைத்த நித்தியானந்தா!

கைலாசா என்றதுமே பலரும் ஜல்சா என்ற ரேஞ்சில்தான் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அதற்குத்தான் ஆப்பு வைத்திருக்கிறார் நித்தியானந்தா.

மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது என்று தெரிவித்துள்ள நித்தியானந்தா, சிவனை வழிபடுகின்ற ஆன்மீக நோக்கத்தோடு மட்டுமே கைலாசாவிற்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.

கைலாசாவிற்கு வர விரும்புவோர் contact@kailaasa.org எனும் மின் அஞ்சலில் தங்களது விபரத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவி்த்திருக்கிறார் நித்தியானந்தா.