கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!

 

கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!

தமிழகம் முழுவதிலும் எம்.ஜி.ஆருக்கு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் என்று சொல்வதை விடவும் எம்.ஜி.ஆர். பக்தர்கள் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தென்மாவட்டங்களில் இந்த பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது.

ஜெயலலிதா, எடப்பாடி என்று யார் வேண்டுமானாலும் வரட்டும். தலைவர் காட்டிய சின்னம் இரட்டை இலை. இந்த உயிர் இருக்குற வரைக்கும் அந்த இரட்டை இலைக்குத்தான் ஓட்டு என்று சொல்லுபவர்கள்கள் அதிமுகவில் மெஜாரிட்டி.

கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!

நிலைமை இப்படி இருக்க, முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் எல்லோரும் ஜெயலலிதாவின் படத்தை மட்டுமே சட்டைப்பையில் வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது அவர் மீதான அச்சத்தினால் அப்படி வைத்திருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர் மறைந்தபிறகும் கூட, ஜெ., படத்தினைத்தான் சட்டைப்பையில் வைத்திருக்கிறார்கள்.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், எம்.ஜி.ஆரால் அதிமுகவுக்கும், அமைச்சர் பொறுப்புக்கு வந்தவர்களும் கூட, ஜெ., படத்தையே சட்டைப்பையில் வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மன்றத்தில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வமும் ஜெ., படத்தை மட்டுமே சட்டைப்பையில் வைத்திருக்கிறார்.

கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டியவர்கள்தான் அதிமுகவின் தற்போதைய பொறுப்புகளில் இருப்பதால் அவர் படத்தினை வைத்திருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. அதே நேரத்தில் உண்மை நிலவரத்தையும் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

சாதாரணமாக உருவான கட்சி அல்ல அதிமுக. அன்றைய கடும் எதிர்ப்பினை மீறி, ரத்தம் சிந்தி தொடங்கப்பட்டது அதிமுக. அன்றைக்கு இருந்த எதிர்ப்பு மாதிரி இன்றைக்கு இருந்தால் ஒரு புதிய கட்சியும் முளைக்க முடியாது. புதுப்புது தலைவர்களும் தலையெடுக்க முடியாது.

எம்.ஜி.ஆராலும், அவரது ரசிகர்களாலும்தான் அன்றைக்கு அது சாத்தியமானது.

கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!

இதையெல்லாம் மறந்து, இன்றைய அதிமுகவினர் எம்.ஜி.ஆரை கைவிட்டனர். வார்த்தைக்கு வார்த்தை அம்மா..அம்மா.. என்றே சொல்லி வருகின்றனர். எல்லாவற்றுக்கு மேலே அப்பன் ஒருவன் இருக்கிறான்..தலைவன் இருக்கின்றான் என்பதை மறந்துவிட்டார்கள் என்பதை கொக்கு போல் காத்திருந்து கவனித்து வந்த கமல், அதை கபக் என்று கையில் எடுத்துக்கொண்டார்.

அதிமுக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், அண்மையில் பாஜகவும் எம்.ஜி.ஆரை கையில் எடுத்தது. ரஜினியும் கையில் எடுக்க துடிக்கிறார். இதையெல்லாம் கவனித்த கமல் முந்திக்கொண்டார்.

கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!

நான் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி, எம்.ஜி.ஆரின் வாரிசு, எம்.ஜி.ஆர். மடியில் வளர்ந்தவன் என்று தீவிரமாக எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்டார் கமல். அம்மாவே சரணம் என்று இருப்பவர்கள் அவரைப்பற்றி விமர்சிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறார்கள் எம்.ஜி.ஆரின் பக்தர்கள்.

கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்தான். தெய்வமாகிவிட்ட எம்.ஜி.ஆர் கொண்டாடும் இடத்திலேயே இருக்கட்டும் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.

கதிரவன்

கைவிட்ட அதிமுக… கையில் எடுத்த கமல்!