திமுகவின் கோட்டைக்குள் குஷ்புவை அனுப்பும் பாஜக

திமுகவின் கோட்டைக்குள் குஷ்புவை அனுப்பும் பாஜக

ஒரு காலத்தில் சென்னை முழுவதுமே திமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டது. காலம் மாறிப்போச்சு. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி திமுகவின் கோட்டையாகவே இருண்டு வருகிறது. 1977 முதல் 2016 வரையிலும், இடையில் 91-96 தவிர்த்து இங்கே 38 ஆண்டுகளாக திமுகவின் கொடிதான் பறக்கிறது.

திமுகவின் கோட்டைக்குள் குஷ்புவை அனுப்பும் பாஜக

தமிழகத்திலேயே சின்ன தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியை மறு சீரமைப்பு செய்து சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி ஆனது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும், 2016 சட்டமன்ற தேர்தலிலும் ஜெ.அன்பழகன் தான் இத்தொகுதியில் நின்று வென்றார். அன்பழகன் மறைவுக்கு பிறகு அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலும் நெருங்கிவிட்டது.

திமுகவின் கோட்டைக்குள் குஷ்புவை அனுப்பும் பாஜக

234 தொகுதிகளில் 228 தொகுதிகளூக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறது பாஜக. அதில், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதிக்கு குஷ்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வேட்பாளரை விடவும் பொறுப்பாளர்தான் முக்கியமானவர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் கோட்டைக்குள் குஷ்புவை அனுப்பும் பாஜக