வாடகை எங்கே ரஜினி?

 

வாடகை எங்கே ரஜினி?

ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் கட்சி ‘மக்கள் சேவை கட்சி(msk) என்றும், அக்கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. ரஜினி கட்சி தொடங்கினால் தனித்து போட்டியா? கூட்டணியா? என்ற கேள்வி இருந்து வந்த நிலையில், 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சி போட்டியிடும் என்று தேர்தல் ஆணையத்திடம் ரஜினி தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்.

வாடகை எங்கே ரஜினி?

இதையடுத்து ரஜினிகாந்த், ‘நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன், நல்லா பாடும் பாட்டுக்காரன், காந்தி பொறந்த நாட்டுக்காரன், கம்பெடுத்தா வேட்டைக்காரன், இரக்கமுள்ள மனசுக்காரண்டா, எழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா, நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா’ என்ற பாட்ஷா படத்தின் பாடலை பதிவிட்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

பாஜகதான் ரஜினிகாந்தை இயக்குகிறது என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், ரஜினிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், டிரைவர் ரஜினிதான் ஆனா, ஆட்டோ பாஜகவோடது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாடகை எங்கே ரஜினி?

மேலும், சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே லதா ரஜினிகாந்த் நடத்தி வந்த ஆஷ்ரம் பள்ளிக்கான வாடகை பணம் சரிவர தராததால், காலி செய்யச்சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி வெளியானதை மறுத்த லதா, வாடகை உரிய முறையில் கட்டப்பட்டு வருகிறது. கொரோனா காரணத்தினால் 2020 காலக்கெடுவுக்குள் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற முடியவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்று 2021ம் ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நெட்டிசன்கள், #வாடகைஎங்கேரஜினி என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்டாக்கி வருகிறார்கள்.