கோட்சேக்களின் அரசியல் வாரிசுகள் காந்தியின் பி டீம் ஆக முடியுமா?

 

கோட்சேக்களின் அரசியல் வாரிசுகள் காந்தியின் பி டீம் ஆக முடியுமா?

பிஜேபியின் பி டீம் என்று கமல்ஹாசனிம் மக்கள் நிதி மய்யம் கட்சி தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. கமஹாசனும் தொடர்ந்து தான் பிஜேபியின் பி டீம் அல்ல என்று சொல்லி வந்தார். அண்மையில் இந்த விவகாரத்தில் கொதித்தெழுந்த கமல்ஹாசன், அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம் என்றார்.

கோட்சேக்களின் அரசியல் வாரிசுகள் காந்தியின் பி டீம் ஆக முடியுமா?

கோவில்பட்டியில் நடந்த தொழில்முனைவோர்களூடனான கலந்துரையாடலில் பேசிய கமல், ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன். நான் காந்தியாருக்கு மட்டும் தான் ‘பி’ டீம். மற்றபடி ஒரு ‘ஏ’ டீம்மை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் என்ற தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

மேலும், நான் மகாத்மாக்களை கண்டுபிடித்து விட்டேன். ஒவ்வொரு ஊரிலும் உள்ளனர். அவர்களை மதிக்க மறந்துவிட்டோம். அவர்களைப் போற்ற வேண்டும் என்றார்.

கோட்சேக்களின் அரசியல் வாரிசுகள் காந்தியின் பி டீம் ஆக முடியுமா?

இதுகுறித்து விடுதல சிறுத்தைகள் கட்சி்யின் விழுப்புரம் மாவட்ட எம்.பி. ரவிக்குமார், கமலஹாசனின் பாடலை சொல்லியே அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அரசியல் பொம்மலாட்டத்தின்
நூல் யார் கையில் ?

கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா – என்று பிறரின் பின்னணியில்தான் கமல் இயங்குகிறார் என்பதை சொன்ன ரவிக்குமார்,

’’கோட்சேக்களின் அரசியல் வாரிசுகள் காந்தியின் பி டீம் ஆக முடியுமா?’’என்று கேட்கிறார்.