மோடி பக்கோடா கடை போடச் சொன்னார்; இவர் பனியாரக் கடையா?

 

மோடி பக்கோடா கடை போடச் சொன்னார்; இவர் பனியாரக் கடையா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹான் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறார். கமல் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் மூன்றுவாது கட்சியாக தங்கள் கட்சியை கொண்டுவருவோம் என்று கமல் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

மோடி பக்கோடா கடை போடச் சொன்னார்; இவர் பனியாரக் கடையா?

சீரமைப்போம் தமிழகத்தை என்ற நோக்குடன் பிரச்சாரத்தை முன்னெடுத்து, மதுரையில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார் கமல். அப்போது அவர் சொல்லுவது குறித்து, மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் பேராசிரியருமான அருணன் கமெண்ட் அடித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் மது விற்பனையை தனியாருக்கு விட்டுவிடுவேன் என்கிறார் கமல், ஆஹா, அரசின் அந்த வருமானத்துக்கும் ஆபத்தா? மது பெருவணிகர்கள் இவரை உற்சாகமாக ஆதரிப்பார்கள்! என்கிறார் அருணன்.

மோடி பக்கோடா கடை போடச் சொன்னார்; இவர் பனியாரக் கடையா?

அவர் மேலும், இளைஞர்கள் வேலைக்காரர்களாக இருக்க கூடாது, முதலாளிகள் ஆகவேண்டும் என்கிறார் கமல். அந்த முதலாளிகளிடம் வேலை பார்ப்போர் எல்லாம் முதியவர்களாக இருப்பார்களே பக்கோடா கடை போடச் சொன்னார் மோடி. இவர் பனியாரக் கடையா? வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி தெரியாதவர்களின் வாய்ஜாலம் இது என்கிறார்.

இப்போது, எனது கட்சியின் கொள்கை நேர்மை என்று சொல்கிறார் கமல். ஜெ. இருந்தவரை இந்த “நேர்மை” வெளிப்படவே இல்லையே! நேர்மை என்பது தீபாவளி, பொங்கலுக்கு வெளியிடப்படும் சினிமாவா? என்று கேட்கிறார் அருணன்.