பாஜகவால் ஏற்க முடியுமா? அதனால்தான் இந்த புலம்பல்…

 

பாஜகவால் ஏற்க முடியுமா? அதனால்தான் இந்த புலம்பல்…

அதிமுகவில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும், நிர்வாகிகளும் தீவிரமாக கோயிலுக்கு சென்று வருகிறார்கள். எந்த தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழா என்றாலும், பூஜைகளுடன் தான் நடக்கின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக என்றாலே ஆன்மீகம் என்ற பெயர் இருக்கிறது. இவர்களுடன் கூட்டணி அமைக்கப்போவதாக சொல்லப்படும் ரஜினிகாந்த், ஆன்மீக அரசியலைத்தான் முன்னெடுத்திருக்கிறார்.

அதிமுக அணியில் இத்தனை ஆன்மீக சக்திகள் இருக்க, எதிரணியில் கடவுள் இல்லை என்ற முத்திரை குத்திக்கொண்டு நிற்கிறது திமுக. அக்கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இஸ்லாம் மதத்தினையும் கிருஸ்துவ மதத்தினையும் தூக்கிப்பிடித்து இந்துக்களின் மனதை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார்.

பாஜகவால் ஏற்க முடியுமா? அதனால்தான் இந்த புலம்பல்…

இதனால் தமிழகத்தில் திமுகவுக்கு ஓட்டுக்கள் கிடைக்காது என்ற பேச்சு இருக்கிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், இன்றைக்கு சிலர் ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உன்மையில் ஆன்மீகம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர், மக்களுக்கு சேவை ஆற்றுவதுதான் மகத்தான ஆன்மீகம் என்று அவர் சொல்லி இருக்கிறார். இதே ராமேஸ்வரம் கோவிலில்தான் 1897ல் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது சொல்லி இருக்கிறார். மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும் என்றும், ஏழைகள் மற்றும் பலவீனமானவர்கள், நோயுற்றவர்களை காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்று அவர் சொல்லி இருக்கிறார் என்றார்.

பாஜகவால் ஏற்க முடியுமா? அதனால்தான் இந்த புலம்பல்…

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மீகம், விவேகானந்தர் என்று பேசுகிறார் என்றார்.

இதுகுறித்து அரசியியல் விமர்சகரும், கடவுளின் கதை உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதி இருக்கும் எழுத்தாளர் அருணன் கதிரேசன், ஆன்மிகம் என்பது ஏழைகளுக்காகப் பாடுபடுவது என்றார் ஸ்டாலின். அதை அதானி, அம்பானிகளுக்காக பாடுபடும் பாஜகவால் ஏற்க முடியுமா? அதனால்தான் இந்த புலம்பல் என்று சொல்லி இருக்கிறார்.