ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அனைத்து விவசாயிகளும் சென்னையில் திரள வேண்டும்… பி.ஆர்.பாண்டியன் அழைப்பு

 

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அனைத்து விவசாயிகளும் சென்னையில் திரள வேண்டும்… பி.ஆர்.பாண்டியன் அழைப்பு

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் புதிய வடிவமாக பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் தற்போது பங்கேற்று வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் சார்பில் பாரத் பந்த் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அனைத்து விவசாயிகளும் சென்னையில் திரள வேண்டும்… பி.ஆர்.பாண்டியன் அழைப்பு

இந்நிலையில், மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ’’நாளை முதல் நாடு முழுவதும் பல கட்ட தீவிர போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன. தமிழகத்தில் சாலைமறியல், ரயில் மறியல், சுங்கச்சாவடி முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறும்’’என்று தெரிவித்தார்.

அவர் மேலும், விவசாயிகளின் பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், போராட்டங்கள் இன்னும் தீவிரமடையும். வரும் 18ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தார்.