விபூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்! குட்டிக்கதை சொல்லி விளக்கம்!

 

விபூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்! குட்டிக்கதை சொல்லி விளக்கம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசாமல் கீழே கொட்டியதால் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் ஸ்டாலின் என்று சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அந்த சர்ச்சை குறித்தும் அதனால் அரசியலில் எழும் தாக்கம் குறித்தும் பேசினார்.

விபூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்! குட்டிக்கதை சொல்லி விளக்கம்!

காணொளி வாயிலாக அக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், ’’சிலர் ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உன்மையில் ஆன்மீகம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர் சொன்னது என்ன தெரியுமா? மக்களுக்கு சேவை ஆற்றுவதுதான் மகத்தான ஆன்மீகம் என்று அவர் சொல்லி இருக்கிறார். இதே ராமேஸ்வரம் கோவிலில்தான் 1897ல் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது சொல்லி இருக்கிறார். மேலும், மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும் என்றும், ஏழைகள் மற்றும் பலவீனமானவர்கள், நோயுற்றவர்களை காப்பவனே உண்மையில் இறைவனை வழிபடுகிறவன் என்று அவர் சொல்லி இருக்கிறார்’’ என்றார்.

விபூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்! குட்டிக்கதை சொல்லி விளக்கம்!

இதற்கு உதாரணமாக விவேகானந்தர் ஒரு கதையையும் சொல்லி இருக்கிறார் என்று சொன்னார் ஸ்டாலின்.

’’ஒரு எஜமானுக்கு ஒரு தோட்டம் இருந்ததாம். இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்களாம். அதில், ஒரு தோட்டக்காரன் அந்த எஜமானை புகழ்வதிலும் அவர் முன்னால் நடிப்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுப்பவராக இருந்திருக்கிறான். இன்னொரு தோட்டக்காரனோ அந்த தோட்த்தை கவனிப்பதிலேயே ஆர்வம் செலுத்தி இருக்கிறான். காய்கறி, பழங்கள் உற்பத்தி செய்திருக்கிறான். அந்த எஜமானின் உயர்வுக்காக நாளும் உழைத்திருக்கிறான்.

விபூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்! குட்டிக்கதை சொல்லி விளக்கம்!

இந்த இருவரில் எஜமானுக்கு யாரை பிடிக்கும்? தன் முன்னால் நடிப்பவரையா? அல்லது தனக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பவரையா?

இந்த கதையை சொன்ன விவேகானந்தர், ஆண்டவன் தான் எஜமான். அவனது தோட்டம் தான் உலகம். எந்த தோட்டக்காரனை ஆண்டவனுக்கு பிடிக்கும்?என்று கேட்டிருக்கிறார். கூடி இருந்த மக்களும் சொல்லி இருக்கிறார்கள்’’ என்று சொன்ன ஸ்டாலின்,

’’இங்கே வெறுமனே சிலர் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம்தான் மக்களுக்கு நன்மைகள் செய்துகொண்டிருக்கிறோம். ஏழைகள் சிரிக்க உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக’’ என்றார்.