ரஜினியால் திமுகவின் வெற்றி இலகுவாகி இருக்கிறது… கி.வீரமணி

 

ரஜினியால் திமுகவின் வெற்றி  இலகுவாகி இருக்கிறது… கி.வீரமணி

ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவுக்கு பாதிப்பு என்ற பேச்சு இருக்கும் சூழலில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ரஜினியால் திமுகவின் வெற்றி இலகுவாகி இருக்கிறது என்றார்.

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

ரஜினியால் திமுகவின் வெற்றி  இலகுவாகி இருக்கிறது… கி.வீரமணி

அப்போது அவரிடம், ரஜினி கட்சி தொடங்குவது குறித்தும், அவர் கட்சி தொடங்குவதால் திமுகவுக்கு பாதிப்பா? என்றும் கேட்டபோது, ‘’ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அவரோட கொள்கை என்னவென்று சொல்லட்டும்’ ’என்றவர், ‘’ரஜினியோட அரசியல் வருகை ரஜினிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்’’என்றார்.

மேலும், ‘’குழப்பமான எதிரிகள் பல வேடங்களில் வந்தார்கள். அவர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று தற்போது தெளிவாகிவிட்டது. ரஜினியின் வருகையால் திமுகவின் வெற்றி இலகுவாகிவிட்டது’’என்றார்.