ரஜினிக்காக கஸ்தூரி உருவாக்கிய போஸ்டர்!

 

ரஜினிக்காக கஸ்தூரி உருவாக்கிய போஸ்டர்!

ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகைகள் ராதிகா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிக்காக கஸ்தூரி உருவாக்கிய போஸ்டர்!

ஏ.ஆர்.முருகதாஸ், லோகோஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு உள்ளிட்ட இயக்குநர்களும் நடிகர்களும் வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு சிலர் வெளியிட்டிருக்கும் போஸ்டரை வெளியிட்டு, அதை வெளியிட்டது மகிழ்ச்சி என்றும், மரியாதை என்றும், பாக்கியம் என்றும் சொல்லி வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானும் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.

ரஜினிக்காக கஸ்தூரி உருவாக்கிய போஸ்டர்!

இந்நிலையில் நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி, சூப்பர்ஸ்டார் ஆரோக்கியத்துடன் வாழவும், அவரது கனவுகள் நிறைவேறவும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது கனெக்ட் வித் கஸ்தூரி சேனலில் சார்பாக ரஜினிக்கு பிறந்த நாள் போஸ்டரை வெளி்யிட்டிருக்கிறார். டிசைனர் சசி இந்த போஸ்டரை உருவாக்கி இருக்கிறார்.

இந்த போஸ்டர் பற்றிய எண்ணங்களை பதிவிட்டு, இதை ஷேர் செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.